< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
3 Nov 2022 1:40 AM IST

ஏர்வாடியில் கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஏர்வாடி:

ஏர்வாடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகுமார் மற்றும் போலீசார் நம்பியாறு செல்லும் பாதையில் ரோந்து சென்றனர். அப்போது சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் ஏர்வாடி புதுக்குடி கீழத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சுடலைராஜ் (வயது 22), உப்பு நடுத்தெருவை சேர்ந்த அப்துல்ரஹ்மான் மகன் சதாம் உசேன் (21) என்பதும், அவர்கள் இரவு நேரங்களில் சிறுவர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 35 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்