< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
3 Oct 2022 3:52 AM IST

கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்

நெல்லை டவுன் பகுதியில் நேற்று முன்தினம் போலீஸ் உதவி கமிஷனர் விஜயகுமார் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர். சேரன்மகாதேவி ரோடு மாரியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த டவுன் பகவத்சிங் தெருவை சேர்ந்த முத்துமாரி (வயது 27) என்பவரை சோதனை செய்தனர். அவர் விற்பனைக்கு மறைத்து வைத்திருந்த சுமார் 200 கிராம் கஞ்சா பொட்டலங்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து முத்துமாரியை‌ கைது செய்தனர். இதே போல் மேலப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாத்திமா பிரவீன் மற்றும் போலீசார் ரோந்து சென்றபோது பீடி காலனி விலக்கு அருகே கஞ்சாவுடன் நின்று கொண்டிருந்த மேலப்பாளையம் ஆமீன்புரம் தெருவை சேர்ந்த பரக்கத்துல்லா (26) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 95 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்