< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
|31 Aug 2022 8:34 PM IST
குளச்சல் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல்:
குளச்சல் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குளச்சல் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) செந்தில்குமார் தலைமையிலான போலீசார் குளச்சல் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது லட்சுமிபுரம் பகுதியில் செல்லும்போது அங்கு 2 பேர் மோட்டார் சைக்கிளுடன் சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்தனர். அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் வாணியக்குடியை சேர்ந்த மீன்பிடித்தொழிலாளி ஆரோக்கிய தினேஷ் (22), பள்ளம் அன்னைநகரை சேர்ந்த 18 வயதுடைய சிறுவன் என்பதும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்்களிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.