< Back
மாநில செய்திகள்
கருங்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

கருங்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
26 July 2022 12:37 AM IST

கருங்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கருங்கல்,

கருங்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கைது

கருங்கல் அருகே சூசைபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் பள்ளி அருகே கருங்கல் சுண்டவிளை பகுதியைச் சேர்ந்த இளங்கோவன் மகன் சதீஷ்குமார் (வயது 21), கருங்கல் புல்லத்து விளை பகுதியைச் சேர்ந்த செல்லப்பன் மகன் சுஜின் (23) ஆகியோர் சந்தேகப்படும்படியாக இருசக்கர வாகனத்தில் நின்று கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக சென்ற கருங்கல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் 2 பேரிடம் விசாரித்த போது முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளனர். இதனை தொடர்ந்து இருசக்கர வாகனத்தை சோதனை செய்த போது 60 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தார்.

மேலும் செய்திகள்