< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
4 July 2022 9:41 PM IST

தூத்துக்குடி அருகே கஞ்சா விற்ற 2 பேைர போலீசார் கைது செய்தனர்.

ஸ்பிக்நகர்:

தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக முத்தையாபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயசீலன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மகாராஜன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் தூத்துக்குடி அண்ணா நகரை சேர்ந்த பெருமாள் மகன் மோகன்குமார், சவேரியார்புரத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் மகாராஜன் (வயது 22) என்பதும், விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை போலீசார் கைது செய்து, 4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்