< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
26 Oct 2023 12:15 AM IST

நாகூர் கடற்கரையில் கஞ்சா விற்ற 2 பேர் கைது

நாகூர்:

நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ்சிங் உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் அறிவுறுத்தலின்படி கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நாகூர் கடற்கரையில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக நாகூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் அங்கு சந்தேகப்படும்படி அமர்ந்திருந்த இரண்டு வாலிபர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் மறைத்து வைத்திருந்த பையை சோதனை செய்தனர். அப்போது அதில் கஞ்சா இருந்தது தெரிய வந்தது. அதைதொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் நாகூர் பீரோடும் தெருவை சேர்ந்த முருகன் மகன் விஷ்வா (வயது 21), நாகூர் ஆரிய நாட்டு தெருவை சேர்ந்த பாலசந்திரன் மகன் மணிகண்டன் பிரபு (34) என்பது தெரிய வந்தது. தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகூர் போலீசார் 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்