< Back
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
தென்காசி
மாநில செய்திகள்

கஞ்சா விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
11 Oct 2023 12:30 AM IST

தென்காசியில் கஞ்சா விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் போதைப்பொருள் நடமாட்டத்தை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். அதன்படி தென்காசி போலீஸ் துணை சூப்பிரண்டு நாகசங்கர் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், சப்-இன்ஸ்பெக்டர் சுதாகர் மற்றும் போலீசார் தென்காசி கீழவாலியன் பொத்தை பகுதியில் ரோந்து சென்றனர்.

அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரிடம் விசாரணை செய்த போது அவர்களிடம் ¼ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்கள் தென்காசியை அடுத்த குத்துக்கல்வலசை ராமர் கோவில் தெருவை சேர்ந்த முருகன் மகன் கரண் (வயது 22), அதே பகுதியைச் சேர்ந்த அழகிரி மகன் கனகராஜ் (43) என்பதும் தெரியவந்தது. போலீசார் 2 பேரையும் கைது செய்து, கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.



மேலும் செய்திகள்