< Back
மாநில செய்திகள்
கன்னியாகுமரி
மாநில செய்திகள்
கஞ்சா விற்ற 2 பேர் கைது
|9 July 2023 12:15 AM IST
அரசு பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜாக்கமங்கலம்:
அரசு பள்ளிக்கூடம் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராஜாக்கமங்கலம் அரசு பள்ளிக்கூடம் அருகே இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 2 வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டிருந்தனர்.
உடனே போலீசார் 2 பேரை பிடித்து சோதனை செய்ததில் அவர்களிடம் 10 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் விசாரணை நடத்தியதில், மங்காவிளை பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் கபின் (வயது 22), கேசவன்புதூர் பகுதியை சேர்ந்த ராஜலிங்கம் மகன் அஜய் (24) என்பதும், கஞ்சா விற்றதும் தெரிய வந்தது. பின்னர் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்தனர்.