< Back
மாநில செய்திகள்

திருவள்ளூர்
மாநில செய்திகள்
மணல் கடத்திய 2 பேர் கைது

5 Jun 2022 4:55 PM IST
கும்மிடிப்பூண்டி அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் பகுதியில் இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது ஆந்திராவில் இருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி சென்ற சந்தேகத்திற்கு இடமான ஒரு லாரியை அவர்கள் மடக்கி நிறுத்தி சோதனை செய்தனர். அந்த லாரியில் ஆந்திராவில் இருந்து உரிய அனுமதியின்றி 10 யூனிட் மணல் கடத்த முயன்றது தெரியவந்தது.
இதுகுறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான ஆந்திர மாநிலம் நெல்லூரை சேர்ந்த டிரைவர் மணிபாபு (வயது 26), கிளீனர் ரவி (23) ஆகியோரை கைது செய்தனர். மேலும் மணலுடன் லாரியையும் போலீசார் கைப்பற்றினர்.