< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மசாஜ் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் பணம் பறித்த 2 பேர் கைது
|13 Oct 2023 2:20 PM IST
சென்னை முகப்பேர் அருகே மசாஜ் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வாலிபரிடம் பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை முகப்பேர் அடுத்த பாடி தேவர் நகர் பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன் (வயது 24). சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு கொண்ட நபர்களின் ஆசை வார்த்தையை நம்பி அதே பகுதியில் உள்ள மசாஜ் சென்டருக்கு மசாஜ் செய்ய சென்றார். அங்கிருந்த 4 பேர் கொண்ட கும்பல் ஹரிகரனை மிரட்டி, ஆன்லைன் மூலம் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.35 ஆயிரத்தை பறித்தனர். இதுபற்றி ஜெ.ஜெ.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் (22) மற்றும் திருவண்ணாமலையை சேர்ந்த பரத்குமார் (21) ஆகிய 2 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.