< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது
|10 July 2023 12:30 AM IST
இளம்பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாளையங்கோட்டை பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருணாசலம் மற்றும் போலீசார் வி.எம்.சத்திரம் சோதனை சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது ஒரு வாலிபர் மோட்டார் சைக்கிளில் இளம்பெண் ஒருவரை ஏற்றிக்கொண்டு வந்தார்.
போலீசார் சந்தேகம் அடைந்து அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் தர்மபுரி பாப்பிரெட்டிபட்டி பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன் (வயது 26) என்பதும், அவர் அந்த பெண்ணை விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்ததும் தெரியவந்தது. மேலும் விசாரணையில் இதற்கு அந்த பெண்ணின் தாயும் உடந்தையாக இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கோவிந்தராஜன், இளம் பெண்ணின் தாய் ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து மோட்டார் சைக்கிள், ரூ.20 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த இளம் பெண்ணை மீட்டு காப்பகத்தில் சேர்த்தனர்.