< Back
மாநில செய்திகள்
வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது
சேலம்
மாநில செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

தினத்தந்தி
|
30 May 2022 2:03 AM IST

வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சூரமங்கலம்:

சேலம் நரசோதிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்தி (வயது 25), இவர், அதே பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற போது மர்மநபர் கார்த்தி மோட்டார் சைக்கிளை வழிமறித்து ரூ.2 ஆயிரத்தை பறித்துக் கொண்டு தப்பி சென்றார். இதுகுறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கார்த்திக்கிடம் வழிப்பறியில் ஈடுபட்டது காடையாம்பட்டியை சேர்ந்த அருள்மணி (23) என்பது தெரிய வந்தது. மேலும் அருள்மணி, அவருடைய உறவினர் ஷ்யாம் சுந்தர் (26) என்பவருடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டது தெரிய வந்தது. உடனே போலீசார் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம் இருந்து 16 பவுன் நகை மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேர் கைது

மேலும் செய்திகள்