< Back
மாநில செய்திகள்
வேப்பம்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடிய 2 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

வேப்பம்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
5 Oct 2023 2:15 PM GMT

வேப்பம்பட்டு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை பணம் திருடிய வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நகை, பணம் திருட்டு

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு எம்.ஆர்.பி நகரை சேர்ந்தவர் பெருமாள் (வயது 40). தனியார் கம்பெனியில் காவலாளியாக வேலை செய்து வருகிறார். இவர் கடந்த செப்டம்பர் 26-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்றார். பின்னர் 27-ந் தேதி இரவு வீட்டிற்கு வந்த போது வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து உள்ளே சென்று பார்த்த போது மர்ம நபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்து 13 பவுன் நகை, ரூ.45 ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து பெருமாள் செவ்வாய்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் வழக்குப்பதிவு செய்து அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தார். அதில் இருவர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை திருடிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்வது பதிவாகியிருந்தது. இன்ஸ்பெக்டர் பாஸ்கர் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

2 பேர் கைது

இந்நிலையில் வழக்கில் தொடர்புடைய திருநின்றவூர் நத்தமேடு பவானி நகர் திலகர் தெருவை சேர்ந்த சுரேஷ் (23) மற்றும் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த வீரகுமார் என்ற சூர்யா (23) ஆகிய இருவரையும் வேப்பம்பட்டு அருகே தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர்.

விசாரணையில் அவர்கள் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட சுரேஷ் மீது ஏற்கனவே ஆவடி, வெள்ளவேடு, பட்டாபிராம், பூந்தமல்லி ஆகிய போலீஸ் நிலையங்களில் குற்ற வழக்குகள் இருப்பதும், வீரகுமார் மீது ஆவடி போலீஸ் நிலையத்தில் திருட்டு மற்றும் கொலை வழக்கு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்