திருவண்ணாமலை
ஹெல்மெட்டால் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
|ஹெல்மெட்டால் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
செய்யாறு
ஹெல்மெட்டால் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
வெம்பாக்கம் தாலுகா பிரம்மதேசம் கிராமத்தை சேர்ந்த நாகப்பன் என்பவரின் மகன் பாபு (வயது 44). இவர் நேற்று முன்தினம் காஞ்சீபுரத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் பிரம்மதேசம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அரவிந்த் மற்றும் அவரது நண்பர்கள் கோகுல் கிருஷ்ணன், சாய் பூசன் ஆகியோரை சிலர் வழிமறித்து ஹெல்மெட்டால் தாக்கியும், தொண்டைப் பகுதியில் கத்தியால் கிழித்தும் கொலை மிரட்டல் விடுத்து வந்துள்ளனர்.
இதனை பார்த்த பாபு தன்னுடைய ஊரைச் சேர்ந்த நபர்களை தாக்கி கொண்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து தடுத்து நிறுத்தினார். பின்னர் அரவிந்த் மற்றும் நண்பர்களை காப்பாற்றி காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து பிரம்மதேசம் போலீஸ் நிலையத்தில் பாபு புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாபா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு அரவிந்தை தாக்கிய குத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரின் மகன் மோகன் (37) அதே பகுதியைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகன் சரவணன் (45) ஆகிேயாரை கைது செய்தார். பின்னர் இருவரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.