< Back
மாநில செய்திகள்
தந்தை-மகனை தாக்கிய 2 பேர் கைது
கன்னியாகுமரி
மாநில செய்திகள்

தந்தை-மகனை தாக்கிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
30 July 2023 12:15 AM IST

கருங்கல் அருகே தந்தை-மகனை தாக்கிய 2 பேர் கைது

கருங்கல்,

கருங்கல் அருகே உள்ள கஞ்சிக்குழி நெல்குப்பவிளையை சேர்ந்தவர் தாமஸ். இவருைடய மகன் சுதர்லின் சுரேஷ் (வயது 32). இவர் சம்பவத்தன்று தனது குடும்பத்தினருடன் துக்க நிகழ்ச்சி பங்கேற்ற பின்னர் காரில் கஞ்சிக்குழி நெல்குப்பவிளை சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது சாலையின் நடுவே ஒரு மோட்டார் சைக்கிள் நிறுத்தப்பட்டிருந்தது. அந்த மோட்டார் சைக்கிளை அப்புறப்படுத்த முயன்றபோது கரிக்கி மேற்கு காட்டுவிளையை சேர்ந்த ஜான் ஹிட்லர் (40), அவருடைய அண்ணன் ஜான் ஜார்வின் (வயது 34) ஆகியோர் சேர்ந்து சுதர்லின் சுரேசிடம் தகராறு செய்து தாக்கினர். இதை தடுக்க வந்த தந்தை தாமசையும் தாக்கினர்.

இதுகுறித்த புகாரின் பேரில் ஜான் ஹிட்லர் மற்றும் ஜான் ஜார்வின் மீது கருங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து இருவரையும் தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு புலிப்பனம் பகுதியில் பதுங்கி இருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை இரணியல் கோர்ட்டில் ஆஜர் படுத்தி நாகர்கோவிலில் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்