< Back
மாநில செய்திகள்
வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கிய 2 பேர் கைது
திருவாரூர்
மாநில செய்திகள்

வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
16 Aug 2023 12:15 AM IST

குடவாசல் அருகே வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடவாசல்:

குடவாசல் அருகே வாலிபரை உருட்டுக்கட்டையால் தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

நண்பர்கள்

குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலம் வடக்கு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் லஷ்மணன் மகன் மருதுபாண்டி(வயது21), ராமலிங்கம் மகன் ராம்கி (22). ராமதுரை மகன் மணிகண்டன் (23). ஆகிய 3 பேரும் நண்பர்கள். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மருதுபாண்டி தனது நண்பர்கள் ராம்கி, மணிகண்டனிடம் என் என்னை வேலைக்கு அழைத்து செல்லவில்லை என கேட்டுள்ளார்.

தாக்குதல்

அதற்கு அவர்கள் உன்னை வேலைக்கு அழைத்து செல்ல முடியாது என கூறியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராம்கி, மணிகண்டன் ஆகியோர்

மருதுபாண்டியை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தாக்கி உள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

2 பேர் கைது

இதுகுறித்த புகாரின் பேரில் குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராம்கி, மணிகண்டன் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்