< Back
மாநில செய்திகள்
தேன்கனிக்கோட்டையில்தகராறில் தந்தை, மகனை தாக்கிய 2 பேர் கைது
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

தேன்கனிக்கோட்டையில்தகராறில் தந்தை, மகனை தாக்கிய 2 பேர் கைது

தினத்தந்தி
|
22 April 2023 11:57 PM IST

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அளேநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடசாமி (வயது 52). லாரி டிரைவர். இவருடைய மகன் சிவகுமார் (23). இவர்களுக்கும் அருகில் உள்ள பெண்ணாங்கூர் கிராமத்தை சேர்ந்த பூபதியப்பா மகன் பசவராஜ் (23), சுரேஷ் மகன் புனித் (19) ஆகியோருக்கும் முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது. அப்போது பசவராஜ், புனித் இருவரும் வெங்கடசாமி, சிவகுமாரை கட்டையால் தாக்கியதாக தெரிகிறது. இதில் காயம் அடைந்த 2 பேரும் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பின்னர் அவர்கள் தேன்கனிக்கோடடை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பசவராஜ், புனித் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்