< Back
மாநில செய்திகள்
4½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது
நாமக்கல்
மாநில செய்திகள்

4½ டன் ரேஷன் அரிசி கடத்தல்; 2 பேர் கைது

தினத்தந்தி
|
21 Oct 2023 12:15 AM IST

நாமக்கல் அருகே 4½ டன் ரேஷன் அரிசியை கடத்திய 2 பேரை கைது செய்த போலீசார் லாரி பறிமுதல் செய்தனர்.

ரேஷன் அரிசி கடத்தல்

நாமக்கல் அடுத்த வள்ளிபுரத்தில் இருந்து வாழவந்தி செல்லும் சாலை வழியாக ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்தப்படுவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறையின் போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி உத்தரவின்பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான போலீசார் வள்ளிபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது மாடகாசம்பட்டி என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த லாரியில் போலீசார் சோதனை நடத்தினர்.

அதில் 90 மூட்டைகள் ரேஷன் அரிசி இருந்தது கண்டறியப்பட்டது. மேலும் 40 மூட்டைகளில் 2 டன் ரேஷன் அரிசியும், 50 மூட்டைகளில் 2½ டன் உடைக்கப்பட்ட ரேஷன் அரிசியும் என மொத்தம் 4½ டன் இருந்தது தெரியவந்தது.

2 பேர் கைது

அதைத்தொடர்ந்து லாரியில் நாமக்கல் அடுத்த பொம்மப்பட்டியை சேர்ந்த முத்துசாமி மகன் சிவகுமார் (வயது 30), ராசிபுரம் அடுத்த அரியாகவுண்டம்பட்டியை சேர்ந்த பழனியப்பன் மகன் மணி (45) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 4½ டன் ரேசன் அரிசி மூட்டைகளும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த கள்ளக்குறிச்சியை சேர்ந்த விஜயன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்