< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பழனி முருகன் கோவிலில் ரூ.2.20 கோடி உண்டியல் காணிக்கை - கோவில் நிர்வாகம் தகவல்
|19 May 2022 6:12 PM IST
கடந்த 25 நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், 974 கிராம் தங்கம், 9,111 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இதில் காணிக்கையாக 2 கோடி ரூபாய்க்கும் அதிகமாக கிடைத்துள்ளது. மேலும் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் உள்ளிட்டவை காணிக்கைகளாக கிடைத்துள்ளன.
அங்கு கடந்த 25 நாட்களாக உண்டியல் காணிக்கை எண்ணப்பட்ட நிலையில், அதில் 974 கிராம் தங்கம், 9,111 கிராம் வெள்ளி கிடைத்துள்ளது. மேலும் 2 கோடியே 20 லட்சத்து 65 ஆயிரத்து 120 ரூபாய் பணமும், 340 வெளிநாட்டு கரன்சிகளும் காணிக்கையாக கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.