< Back
மாநில செய்திகள்
196 கிலோ குட்கா பறிமுதல்
திண்டுக்கல்
மாநில செய்திகள்

196 கிலோ குட்கா பறிமுதல்

தினத்தந்தி
|
19 Sept 2022 11:56 PM IST

ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த குட்கா மற்றும் போலி மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஒட்டன்சத்திரம் பகுதியில் உள்ள குடோனில் குட்கா பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒட்டன்சத்திரம் இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள குடோன்களில் சோதனை நடத்தினர். அதில் ஒரு குடோனில் குட்கா மற்றும் போலி மதுபான பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

பின்னா் அங்கிருந்த 1,392 போலி மதுபான பாட்டில்கள் மற்றும் 196 கிலோ குட்காவை போலீசாா் பறிமுதல் செய்தனர்.இதுதொடர்பாக ஒட்டன்சத்திரம் ஏ.பி.பி நகரைச் சேர்ந்த குப்புசாமி (வயது 44), மோசஸ் (45), சையது முகமது (41) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்