< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய வழக்கில் 19 பேருக்கு நிபந்தனை ஜாமீன்
|1 Jun 2023 6:40 PM IST
வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய புகாரில் கைதான 19 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.
கரூர்,
கரூரில் கடந்த மாதம் 26-ந்தேதி 10-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது கரூரில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனைக்கு தி.மு.க.வினர் எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் வந்த கார் சேதப்படுத்தப்பட்டது. அதிகாரிகளும் முற்றுகையிடப்பட்டனர்.
இதனையடுத்து அங்கு நிலவிய அசாதாரண நிலையை உணர்ந்து அதிகாரிகள் சோதனையை கைவிட்டு திரும்பி சென்றனர். பின்னர் இதுகுறித்து வருமான வரித்துறை அதிகாரிகள் போலீசில் புகார் அளித்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள் 3 பேர் கொடுத்த புகாரின் பேரில்கடந்த 2 தினங்களுக்கு முன்பு 19 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இந்த நிலையில், வருமான வரித்துறை அதிகாரிகளை தாக்கிய புகாரில் கைதான 19 திமுகவினருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி கரூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.