< Back
மாநில செய்திகள்
19 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

19 ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு பதவி உயர்வு - தமிழ்நாடு அரசு உத்தரவு

தினத்தந்தி
|
1 Jan 2024 10:30 PM IST

பதவி உயர்வுக்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா இன்று பிறப்பித்தார்.

சென்னை,

1999-ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ்.அதிகாரிகள் ஆனந்த குமார் சோமானி, தமிழ்சந்திரன் ஆகிய 2 பேரும் ஐ.ஜி. பதவியில் இருந்து கூடுதல் டி.ஜி.பி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஜெயஸ்ரீ (2004 பிரிவு), சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகணன் (2006 பிரிவு) ஆகிய 7 பேர் டி.ஐ.ஜி. பதவியில் இருந்து ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

ஐ.பி.எஸ். அதிகாரிகள் வெண்மதி (2009 பிரிவு), அரவிந்தன், விக்ரமன், சரோஜ் குமார் தாகூர், மகேஷ்குமார், தேவராணி, உமா, திருநாவுக்கரசு, ஜெயந்தி, ராமர் (2010 பிரிவு) ஆகிய 10 பேரும் போலீஸ் சூப்பிரண்டு பதவியில் இருந்து டி.ஐ.ஜி.யாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். இதில் திருநாவுக்கரசு முதல்-அமைச்சரின் பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டாக உள்ளார்.

இதற்கான உத்தரவை தமிழ்நாடு அரசின் உள்துறை முதன்மை செயலாளர் அமுதா இன்று பிறப்பித்தார். புத்தாண்டு அன்று இந்த அறிவிப்பு வெளியானதால் இந்த அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசு போன்று பதவி உயர்வு அமைந்துள்ளது.

மேலும் செய்திகள்