< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடியுடன் கூடிய லேசான மழை தொடர வாய்ப்பு
|17 March 2023 6:15 PM IST
தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடியுடன் கூடிய லேசான மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை,
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் காரணமாக தமிழகத்தில் நான்கு நாட்களுக்கு மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது. கடந்த சில மணி நேரங்களாக சென்னையின் முக்கிய பகுதிகளில் மிதமான மழை விட்டு விட்டு பெய்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்தில் 19 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரம் இடியுடன் கூடிய லேசான மழை தொடர வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, சென்னை, செங்கல்பட்டு, நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், சேலம், கரூர், நாமக்கல், தர்மபுரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், தி.மலை, தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.