< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு 19-ந்தேதி விடுமுறை
|17 April 2024 12:36 AM IST
தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
வண்டலூர்,
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விடுமுறை தினமாகும், இந்த நிலையில் தமிழகத்தில் வருகிற 19-ந்தேதி (வெள்ளிக்கிழமை) அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
அன்றைய தினம் வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.