< Back
மாநில செய்திகள்
சென்னையில் 18-ந்தேதி ம.தி.மு.க. நிர்வாகக்குழு, ஆட்சிமன்ற குழு கூட்டம் - வைகோ
மாநில செய்திகள்

சென்னையில் 18-ந்தேதி ம.தி.மு.க. நிர்வாகக்குழு, ஆட்சிமன்ற குழு கூட்டம் - வைகோ

தினத்தந்தி
|
14 March 2024 5:07 PM IST

நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக நிர்வாகக்குழு, ஆட்சிமன்ற குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது,

ம.தி.மு.க. நிர்வாகக்குழு கூட்டம் வருகிற 18-ந்தேதி காலை 10 மணிக்கு சென்னை எழும்பூரில் உள்ள கட்சி தலைமை நிலையமான தாயகத்தில் அவைத்தலைவர் அர்ஜூனராஜ் தலைமையில் நடைபெறும்.

இக்கூட்டத்தில் உயர்நிலைக்குழு, மாவட்ட செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, தணிக்கைக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மையம் ஆகிய அமைப்புக்களின் செயலாளர்கள் மற்றும் குழுக்களின் உறுப்பினர்கள், தலைமைக் கழக மற்றும் அணிகளின் செயலாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.ம.தி.மு.க. ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் அன்று மாலை 3 மணிக்கு நடைபெறும். இக்கூட்டத்தில் ஆட்சிமன்றக்குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக இதில் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்