< Back
மாநில செய்திகள்
பதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி சாதனை

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பதிவுத்துறையில் ஒரே நாளில் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி சாதனை

தினத்தந்தி
|
19 Oct 2023 2:47 PM IST

பதிவுத்துறையில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.180 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

ஐப்பசி முதல் நாள் சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் என்பதால், அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள்(டோக்கன்) ஒதுக்கீடு செய்வது வழக்கம்.

அந்த வகையில் ஐப்பசி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு நேற்று பதிவுத்துறை அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்கப்பட்டன. இந்த நிலையில் பதிவுத்துறையில் நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.180 கோடி வருவாய் ஈட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளதாக வணிக வரி மற்றும் பதிவுத்துறை செயலர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாளைய தினம் ஐப்பசி மாத முதல் வெள்ளிக்கிழமை என்பதால், நாளையும் அதிக பத்திரப்பதிவு நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை முன்னிட்டு நாளையும் கூடுதல் முன்பதிவு வில்லைகள் வழங்க பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும் செய்திகள்