< Back
மாநில செய்திகள்
100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 18 பேரை கதண்டுகள் கடித்தது
திருச்சி
மாநில செய்திகள்

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 18 பேரை கதண்டுகள் கடித்தது

தினத்தந்தி
|
13 April 2023 1:27 AM IST

100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 18 பேரை கதண்டுகள் கடித்தது

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்து உள்ளது பெரமங்கலம் ஊராட்சி. இந்த ஊராட்சியில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் சாலையோரம் உள்ள புதர்களை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று திருச்சியில் இருந்து துறையூர் செல்லும் சாலையில் தனியார் பால் பண்ணை அருகே சாலையோர புற்களை 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்கள் 18 பேர் அகற்றிக்கொண்டு இருந்தனர். அப்போது, அங்குள்ள வேலியில் இருந்த கதண்டுகளின் கூடு கலைந்தது. இதனால் அங்கு இருந்து பறந்து வந்த கதண்டுகள் தொழிலாளர்களை கடித்தன. இதனால் அவர்கள் அலறி துடித்தனர். இதனை கண்ட அப்பகுதியினர் அவர்களை மீட்டு சரக்கு ஆட்டோ மூலம் துறையூர் அருகே உள்ள ஓமாந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு கதண்டுகள் கடித்ததில் காயம் அடைந்த 18 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர்கள் வீடுதிரும்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்