< Back
மாநில செய்திகள்
ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் 18 பயணிகள் படுகாயம்
பெரம்பலூர்
மாநில செய்திகள்

ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் 18 பயணிகள் படுகாயம்

தினத்தந்தி
|
29 Jan 2023 12:53 AM IST

ஆம்னி பஸ் கவிழ்ந்ததில் 18 பயணிகள் படுகாயமடைந்தனர்.

பள்ளத்தில் கவிழ்ந்தது

திருச்சியில் இருந்து பெங்களூரு நோக்கி ஆம்னி பஸ் ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்றது. இந்த பஸ்சில் 20 பயணிகள் பயணம் செய்தனர். பஸ்சை திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள பூவாளூரை சேர்ந்த பசுபதி(வயது 29) ஓட்டினார்.

நள்ளிரவு 2 மணி அளவில் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை பெட்ரோல் விற்பனை நிலையம் அருகே வந்தபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோர பள்ளத்தில் இறங்கி கவிழ்ந்தது. இதனால் அந்த பஸ்சில் இருந்த பயணிகள் உள்ளிட்டோர் அய்யோ... அம்மா... காப்பாற்றுங்கள்... என்று அபய குரல் எழுப்பினர்.

18 பேர் படுகாயம்

இது குறித்து தகவல் அறித்த நெடுஞ்சாலை ரோந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பஸ்சில் இடுபாடுகளில் சிக்கித் தவித்த பயணிகளை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் ஓசூரை சேர்ந்த புஷ்பாகாந்தி(60), லட்சுமி(55), பெங்களூருவை சேர்ந்த ராஜேஷ் (45) உள்பட பயணிகள் 18 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தில் டிரைவர் பசுபதி, மாற்று டிரைவர் உத்திரகுமார், கிளீனர் நேசமணி உள்பட 5 பேர் காயமின்றி தப்பித்தனர். இந்த விபத்து குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நள்ளிரவில் நடந்த இந்த விபத்தால் வேப்பந்தட்டை பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்