< Back
மாநில செய்திகள்
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி
மாநில செய்திகள்

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி

தினத்தந்தி
|
1 Feb 2024 9:43 AM IST

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வாயிலாக ஆன்லைனில் ரூ.1.8 லட்சம் மோசடி நடைபெற்று இருப்பதாக சென்னை வடபழனியைச் சேர்ந்த ஸ்ரீதரன்(51) என்பவர் தியாகராயநகர் காவல் துணை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

அதில், பயண டிக்கெட்டை ரத்து செய்வதற்காக இணையதளத்தில் For Help என்று பதிவிடப்பட்டிருந்த 9832603458 என்ற எண்ணுக்கு அழைத்து அந்நபர் தனது வங்கி விவரங்களை வழங்க, சில நிமிடங்களில் ஸ்ரீதரன் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.8 லட்சம் எடுக்கப்பட்டது என தெரிவித்துள்ளார்.

இதையடுத்து போலீசார் விசாரணை நடத்த தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் பதிவிடப்பட்டு இருந்த மொபைல் நம்பர், ரெயில்வே நிர்வாகத்தால் பதிவிடப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் ஹேக் செய்யப்பட்டதா? என்பது குறித்து வடபழனி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்