< Back
மாநில செய்திகள்
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறிகல்லூரி மாணவரிடம் நூதன முறையில் ரூ.18 லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரம்
மாநில செய்திகள்

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறிகல்லூரி மாணவரிடம் நூதன முறையில் ரூ.18 லட்சம் மோசடிமர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு

தினத்தந்தி
|
25 July 2023 6:45 PM GMT

குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் எனக்கூறி தனியார் கல்லூரி மாணவரிடம் நூதன முறையில் ரூ.18 லட்சத்தை மோசடி செய்த மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தனியார் கல்லூரி மாணவர்

திண்டிவனம் தாலுகா கொடியம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன் மகன் கமல் (வயது 25). இவர் நாமக்கல்லில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் எம்.பார்ம் படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருடைய செல்போனுக்கு மர்மநபர் ஒருவர் டெலிகிராம் ஐ.டி. மூலம் பகுதிநேர வேலை என குறுந்தகவலை அனுப்பி வைத்து அதனுடன் ஒரு லிங்கையும் அனுப்பி வைத்துள்ளார்.

இதைப்பார்த்த கமல், அந்த லிங்கினுள் சென்று பார்த்தபோது அவரை தொடர்பு கொண்டு பேசிய நபர், வீடியோ, போட்டோவை லைக் செய்து அனுப்பி வைக்குமாறு கூறினார். அதன்படியே கமலும் செய்துள்ளார். பின்னர் அந்த நபர், டெலிகிராம் ஐடி மூலம் கமலை தொடர்புகொண்டு சிறிய தொகையை முதலீடு செய்து டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் எனக்கூறியுள்ளார்.

ரூ.18 லட்சம் மோசடி

இதை நம்பிய கமல், ரூ.1,000 செலுத்தி ரூ.1,300 ஆகவும், பின்னர் ரூ.2,800 செலுத்தி ரூ.3,640 ஆகவும் திரும்பப் பெற்றுள்ளார். அதன் பிறகு, தான் கணக்கு வைத்திருக்கும் 3 வங்கி கணக்குகளுடன் இணைக்கப்பட்ட பேடிஎம், கூகுள்பே மூலமாகவும், தனது தந்தை கணக்கு வைத்திருக்கும் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட பேடிஎம், கூகுள்பே மூலமாகவும் மற்றும் தனது நண்பர் ஒருவரின் வங்கி கணக்குடன் இணைக்கப்பட்ட கூகுள்பே மூலமாகவும் 41 தவணைகளாக மொத்தம் ரூ.18 லட்சத்து 11 ஆயிரத்து 630-ஐ அந்த நபர் அனுப்பச்சொன்ன வங்கிகளின் கணக்குகளுக்கு கமல் அனுப்பி வைத்துள்ளார். ஆனால் டாஸ்க் முடித்த பின்னரும் கமலுக்கு சேர வேண்டிய தொகையை திருப்பித்தராமல் ஏமாற்றி மோசடி செய்துவிட்டார்.

இதுகுறித்து கமல், விழுப்புரம் மாவட்ட சைபர்கிரைம் பிரிவு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நூதன முறையில் பணத்தை மோசடி செய்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்