< Back
மாநில செய்திகள்
தகுதிச்சான்று இல்லாத 18 ஆட்டோக்கள் பறிமுதல்
தேனி
மாநில செய்திகள்

தகுதிச்சான்று இல்லாத 18 ஆட்டோக்கள் பறிமுதல்

தினத்தந்தி
|
17 Oct 2023 6:15 AM IST

தேனியில் தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

தேனியில் தகுதிச்சான்று இல்லாமலும், உரிய ஆவணங்கள் இன்றியும் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வாகன தணிக்கை செய்து உரிய ஆவணங்கள் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்ய போக்குவரத்து போலீசாருக்கு, தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரே உத்தரவிட்டார். அதன்பேரில், தேனி போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தட்சிணாமூர்த்தி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சக்கப்பன் மற்றும் போலீசார் தேனி நகரில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது தகுதிச்சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 18 ஆட்டோக்களை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் தேனியில் உள்ள ஒரு வாகன நிறுத்தத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன.

மேலும் செய்திகள்