< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 174 வாகனங்கள் பறிமுதல்
|19 Oct 2022 1:37 AM IST
தகுதி சான்று இல்லாமல் இயக்கப்பட்ட 174 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
சேலம் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் சுங்கச்சாவடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு உரிமம் இல்லாத வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தினர். இதுகுறித்து வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், கடந்த ஒரு மாதமாக சேலம், தர்மபுரி ஆகிய மாவட்டங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. இதில் போக்குவரத்து விதிமுறை மீறி இயக்கிய 1,343 வாகனங்களின் உரிமையாளர்களுக்கு ரூ.23 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அதே போன்று விதிகளை மீறி இயக்கப்பட்ட வேன், மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட 174 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 39 டிரைவர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றனர்.