< Back
மாநில செய்திகள்
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது
மாநில செய்திகள்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேர் கைது

தினத்தந்தி
|
29 Sept 2024 7:58 AM IST

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

ராமேஸ்வரம்,

கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. இலங்கை கடற்படையின் அத்துமீறலுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனாலும் மீனவர்கள் படும் இன்னலுக்கு தீர்வு வந்தபாடில்லை.

இந்த நிலையில், நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் 17 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரையும் அங்கு வந்த இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

17 தமிழக மீனவர்களையும் காங்கேசன் துறை கடற்படை முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் விசாரித்து வருகிறார்கள். இதேபோன்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்த மீனவர்களின் வலைகளை இலங்கை கடற்படை வெட்டி வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்