< Back
மாநில செய்திகள்
தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்
மாநில செய்திகள்

தமிழக மீனவர்கள் 17 பேர் கைது: இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும் - ராமதாஸ்

தினத்தந்தி
|
7 Dec 2023 11:15 PM IST

இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

சென்னை,

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில் தெரிவித்து இருப்பதாவது:-

வங்கக்கடலில் மீன் பிடிக்கச் சென்ற புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 9 மீனவர்களும், இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 8 மீனவர்களும் அவர்களுக்கு சொந்தமான 3 விசைப்படகுகளுடன் சிங்களக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிங்களக் கடற்படையினரின் இந்த அத்துமீறல் கண்டிக்கத்தக்கது.

சிங்களக் கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அண்மைக்காலமாக அதிகரித்து வருகிறது. இலங்கைக் கடற்படையினரின் அத்துமீறலுக்கு நிரந்தரத் தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்போது கைது செய்யப்பட்டுள்ள 17 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்டுள்ள அனைத்து படகுகளையும் மீட்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.


மேலும் செய்திகள்