< Back
மாநில செய்திகள்
விவசாயி வீட்டில் 17½ பவுன் நகைகள் கொள்ளை
கடலூர்
மாநில செய்திகள்

விவசாயி வீட்டில் 17½ பவுன் நகைகள் கொள்ளை

தினத்தந்தி
|
20 Sept 2022 1:16 AM IST

பண்ருட்டி அருகே பட்டப்பகலில் விவசாயி வீட்டில் 17½ பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

புதுப்பேட்டை,

கொள்ளை

பண்ருட்டி அருகே உள்ள திருத்துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் மகன் நந்தகோபால்(வயது 47). விவசாயி. இவர் நேற்று காலையில் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் விவசாய நிலத்துக்கு சென்றார். இதை நோட்டமிட்ட மர்மநபர்கள், வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த ரூ.6 லட்சம் மதிப்புள்ள 17½ பவுன் நகை மற்றும் வெள்ளிப்பொருட்களை கொள்ளையடித்துச் சென்றனர்.

அதிர்ச்சி

இதனிடையே வீட்டிற்கு வந்த நந்தகோபால் குடும்பத்தினர், நகைகள் கொள்ளைபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது பற்றி தகவல் அறிந்ததும் புதுப்பேட்டை போலீசார் விரைந்து வந்து கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். இதேபோல் குச்சிபாளையத்தை சேர்ந்த வேணுநாதன் என்பவரது வீட்டிலும் மர்மநபர்கள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பட்டப்பகலில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்