< Back
மாநில செய்திகள்
அரியலூர்
மாநில செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 17 பேர் கைது
|7 April 2023 12:17 AM IST
பணம் வைத்து சூதாடிய 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் ரெயில்வே மேம்பாலம் அருகே சிலர் பணம் வைத்து சூதாடுவதாக அரியலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின் பேரில் அரியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். அப்போது அப்பகுதியில் பணம் வைத்து சூதாடிய அரியலூரை சேர்ந்த சின்னையன்(வயது 45), தியாகராஜன் (26), அசோக் ராஜ்(38) தர்மராஜ்(36) உள்பட 17 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 7 சீட்டு கட்டுகள், ரூ.1 லட்சத்து 7 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.