< Back
மாநில செய்திகள்
ஆரணி அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சிறுவர்கள் உட்பட 17 பேர் காயம்
மாநில செய்திகள்

ஆரணி அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - சிறுவர்கள் உட்பட 17 பேர் காயம்

தினத்தந்தி
|
18 July 2022 10:55 AM IST

ஆரணி அருகே அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சிறுவர்கள் உட்பட 17 பேர் காயமடைந்தனர்.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அப்பதாங்கல் கூட்ரோடு அருகில் ஆரணி சென்னை சாலையில் ஆரணியிலிருந்து சென்னை நோக்கி சென்ற 202 தடம் எண் கொண்ட அரசு பேருந்தும் சென்னையிலிருந்து போளுர் நோக்கி வந்த 204 தடம் எண் கொண்ட அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்துகுள்ளானது.

மேலும் இதில் பயணம் செய்த 5 பெண்கள், 7 ஆண்கள், 3 சிறுவர்கள் மற்றும் அரசு பேருந்து ஓட்டுனர்கள் ராஜேந்திரன், பாஸ்கர் மற்றும் நடத்துனர்கள் ஆனந்தன், ரஞ்சித் உள்ளிட்ட 17 பேர் படுகாயடைந்தனர்.

பின்னர் படுகாயமடைந்தவர்களை போலீசார் மீட்டு 108 ஆம்பூலன்ஸ் மூலம் ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து 17 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் சென்னை அயனாவரம் பகுதியை சேர்ந்த அம்பிகா ஆரணி வி.ஏ.கே நகர் பகுதியை சேர்ந்த லட்சுமி ஆகியோர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுக்கா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு முன்னால் சென்ற பேருந்தை முந்த முயன்ற போது விபத்து நடைபெற்றதாக முதல் கட்ட விசாரணையில் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்