கன்னியாகுமரி
நாகர்கோவிலில்வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடிய கொத்தனார் கைது
|நாகர்கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
நாகா்கோவில்:
நாகர்கோவிலில் வீட்டின் பூட்டை உடைத்து 17 பவுன் நகையை திருடிய கொத்தனாரை போலீசார் கைது செய்தனர்.
17 பவுன் நகை திருட்டு
நாகர்கோவில் வடசேரி கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 34), நகை மதிப்பீட்டாளர். இவருடைய மனைவி பார்வதி (23). சம்பவத்தன்று கார்த்திக் வேலை சம்பந்தமாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார். அதைத்தொடர்ந்து பார்வதி தனது தாயார் வீட்டுக்கு சென்று தங்கினார். கடந்த 21-ந் தேதியன்று கார்த்திக் வீட்டுக்கு திரும்பி வந்தார்.
அப்போது வீட்டு மாடி கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்து இருந்த 17 பவுன் நகையை காணவில்லை. வீட்டின் மாடிக்கதவின் பூட்டை மர்மநபர் உடைத்து உள்ளே புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடி சென்றது தெரியவந்தது.
கொத்தனார் கைது
இதுபற்றி வடசேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்ே்பரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
அப்போது அதில், ஒரு வாலிபர் வீட்டின் மேல்மாடி வழியாக உள்ளே செல்வதும், சிறிது நேரத்திற்கு பிறகு மாடி வழியாக இறங்கி தப்பி செல்வது போன்ற காட்சிகள் பதிவாகி இருந்தன. அதில் நகையை திருடியவரின் உருவமும் தெளிவாக பதிவாகி இருந்தது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.
அப்போது இந்த திருட்டில் நாகர்கோவில் வாத்தியார்விளையை சேர்ந்த கொத்தனார்் ஆனந்த் (34) ஈடுபட்டது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து தனிப்படையினர் ஆனந்தை நேற்றுமுன்தினம் இரவு வடசேரி பஸ் நிலையத்தில் கைது செய்தனர். ஆனந்த் மீது ஏற்கனவே வடசேரி போலீஸ் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.