< Back
மாநில செய்திகள்
லாபத்தில் பங்கு தருவதாக நண்பரிடம் ரூ.17 லட்சம் மோசடி - வாலிபர் கைது
சென்னை
மாநில செய்திகள்

லாபத்தில் பங்கு தருவதாக நண்பரிடம் ரூ.17 லட்சம் மோசடி - வாலிபர் கைது

தினத்தந்தி
|
9 July 2022 9:46 AM IST

லாபத்தில் பங்கு தருவதாக நண்பரிடம் ரூ.17 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை கோட்டூர்புரத்தைச் சேர்ந்தவர் விஜேந்தர் (வயது 33). இவர் கோட்டூர்புரம் போலீசில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அந்த புகார் மனுவில், "தூத்துக்குடியைச் சேர்ந்த எனது நண்பர்கள் சிவகுமார் (37), பாலமுருகன் ஆகியோர் நிலக்கரி வியாபாரம் செய்வதாகவும், அதில் பங்குதாரராக சேர்ந்தால் கிடைக்கும் லாபத்தில் பங்கு தருவதாகவும் கூறி ரூ.17 லட்சம் வாங்கி ஏமாற்றி விட்டதாக" தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கோட்டூர்புரம் போலீஸ் உதவி கமிஷனர் சுப்பிரமணியன் மேற்பார்வையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். சிவகுமார் நேற்று கைது செய்யப்பட்டார். பாலமுருகனை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்