< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
வரும் 16-ம் தேதி அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை
|10 Jan 2024 7:17 PM IST
அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
சென்னை,
தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் சிறப்பாக கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் தமிழக அரசு சார்பில் அரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புடன், ரொக்கப்பணமும் வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு அரிசி அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரூ.1,000 பரிசுத்தொகை மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு உள்ளடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ஏதுவாக, வரும் 12-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் பணி நாளாக அறிவிக்கப்பட்டது.
அதற்கு ஈடாக வரும் 16-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.