புதுக்கோட்டை
1,676 கி.மீ. தூரத்தை 33 நாட்களில் கடந்து வந்த புறா
|அன்னவாசல் அருகே 1,676 கி.மீ. தூரத்தை 33 நாட்களில் கடந்து புறா வந்தது.
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே பெருமநாடு பகுதியை சேர்ந்தவர் நிஜாம்தீன். இவர், பல ஆண்டுகளாக புறாக்களை வளர்த்து வருகிறார். மேலும், அதற்கு பயிற்சியும் அளித்து வருகிறார். இந்தநிலையில் டி.ஆர்.பி.எப். என்ற அமைப்பின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட ஓபன் புறா பந்தயத்தில் தஞ்சாவூர் டெல்டா பந்தய குழு மூலம் இவரது புறா கலந்துகொண்டது. மேலும், தமிழ்நாட்டில் இருந்து 44 புறாக்கள் கலந்து கொண்டன. நிஜாம்தீன் புறா டெல்லிக்கு அருகாமையில் உள்ள ஜான்சி என்ற இடத்தில் இருந்து புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் அருகே பெருமநாட்டிற்கு 1,676 கிலோமீட்டர் (ஏர் டிஸ்டன்ஸ்) தூரத்தை 33 நாட்களில் கடந்து வந்தது. இதையடுத்து புறாவின் உரிமையாளர் நிஜாம்தீனை, உறவினர்கள், நண்பர்கள் ஆகியோர் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். டெல்லியில் இருந்து சுமார் 1,676 கிலோ மீட்டர் தூரம் வரை கடந்து வந்த புறாவை அப்பகுதியில் உள்ளவர்கள் ஆச்சரியத்துடன் வந்து பார்த்து செல்கின்றனர்.