< Back
மாநில செய்திகள்
சென்னையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 165.87 கி.மீ. நீள கேபிள், இன்டர்நெட் வயர்கள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை
சென்னை
மாநில செய்திகள்

சென்னையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட 165.87 கி.மீ. நீள கேபிள், இன்டர்நெட் வயர்கள் அகற்றம் - மாநகராட்சி நடவடிக்கை

தினத்தந்தி
|
12 Oct 2022 3:50 AM GMT

பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உபயோகமில்லாத கேபிள்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள கேபிள் டி.வி., இன்டர்நெட் வயர்களை அகற்றி முறைப்படுத்தவும், மேலும், அனுமதியின்றி சட்டத்திற்கு புறம்பாக அமைக்கப்பட்டுள்ள கேபிள்களை அகற்றவும் மின்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, இதுவரை 165.87 கி.மீ. நீள கேபிள் டிவி மற்றும் இன்டர்நெட் வயர்கள் மாநகராட்சி பணியாளர்களால் அகற்றப்பட்டுள்ளது. வார்டுகளில் மாநகராட்சி பணியாளர்கள் கேபிள் வயர்களை அகற்றுதல் மற்றும் முறைப்படுத்துதல் பணிகளை மேற்கொள்வதற்கு முன்னதாக, சேவை நிறுவனங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தாமாக முன்வந்து வயர்களை அகற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தாமாக முன்வந்து கேபிள் வயர்களை அகற்றாதபட்சத்தில் மாநகராட்சியின் சார்பில் அகற்றப்பட்டு வருகிறது. எனவே, மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கேபிள் டி.வி. மற்றும் இன்டர்நெட் நிறுவனங்கள் உபயோகமில்லாத கேபிள்கள், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கு இடையூறாக உள்ள வயர்களை அகற்றவும், முறைப்படுத்தப்படாத வயர்களை முறைப்படுத்தி சீர்செய்யவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்