< Back
மாநில செய்திகள்
செம்மஞ்சேரியில் ரூ.165 கோடியில் கால்வாய் திட்ட பணி -அமைச்சர்கள் துரைமுருகன்-மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்
சென்னை
மாநில செய்திகள்

செம்மஞ்சேரியில் ரூ.165 கோடியில் கால்வாய் திட்ட பணி -அமைச்சர்கள் துரைமுருகன்-மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தனர்

தினத்தந்தி
|
14 Jun 2022 7:51 AM IST

செம்மஞ்சேரியில் ரூ.165 கோடியில் கால்வாய் திட்ட பணிகளை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

சென்னை அருகே செம்மஞ்சேரி கால்வாய், ஒட்டியம்பாக்கம் ஓடை, மதுரப்பாக்கம் ஓடைகளை பள்ளிக்கரணை கழுவெளி வரை இணைக்கும் வகையில் அவசர கால வெள்ளக்கடத்தும் கால்வாய்கள் அமைக்கப்பட இருக்கிறது. ரூ.165 கோடியில் 6 திட்ட பணிகளை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி., அரவிந்த் ரமேஷ் எம்.எல்.ஏ., செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், நீர்வளத்துறை முதன்மை தலைமைப் பொறியாளர் கு.ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் எ.முத்தையா, செயற்பொறியாளர் செல்வகுமார், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் எஸ்.இ.ரவிச்சந்திரன், வி.மதியழகன், பெரும்பாக்கம் ஊராட்சி தலைவர் சுகாசினி ரங்கராஜன் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் துரைமுருகன் நிருபர்களிடம் கூறும்போது,"ரூ.165.35 கோடி மதிப்பில் இவ்விடத்தில் 6 பணிகள் மேற்கொள்ளப்பட இருக்கிறது. இப்பணிகள் நிறைவடைந்த பிறகு ஒவ்வொரு வருடமும் வெள்ளத்தால் பாதிக்கப்படும் இப்பகுதிகள் வெள்ளப்பாதிப்பில் இருந்து தவிர்க்கப்படும்" என்றார்.

மேலும் செய்திகள்