< Back
மாநில செய்திகள்
நெல்லையில் கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு - மாவட்ட நிர்வாகம் தகவல்
மாநில செய்திகள்

நெல்லையில் கனமழைக்கு இதுவரை 16 பேர் உயிரிழப்பு - மாவட்ட நிர்வாகம் தகவல்

தினத்தந்தி
|
25 Dec 2023 12:36 PM IST

நெல்லையில் மழை வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ. 2.87 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நெல்லை,

நெல்லை மாவட்டத்தில் கடந்த 17, 18-ந் தேதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் தத்தளித்தன. வெள்ள பாதிப்புகளை சீரமைக்கும் பணி, நிவாரண பணிகளில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அமைச்சர்கள், கண்காணிப்பு அலுவலர்கள், அரசு உயர் அதிகாரிகள் ஒருங்கிணைந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில், நெல்லை மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்களை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, நெல்லை மாவட்டத்தில் பெய்த கனமழையால் இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழையால் 1,064 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 67 மாடுகள், 504 ஆடுகள், 135 கன்றுகள், 28,382 கோழிகள் உயிரிழந்துள்ளன.

நெல்லையில் மழை வெள்ள பாதிப்பு நிவாரணமாக ரூ. 2.87 கோடி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக ரூ.58.14 லட்சம் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளது என்று மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்