< Back
மாநில செய்திகள்
16 வயது சிறுமிக்கு திருமணம்
விழுப்புரம்
மாநில செய்திகள்

16 வயது சிறுமிக்கு திருமணம்

தினத்தந்தி
|
22 March 2023 12:15 AM IST

விழுப்புரம் அருகே 16 வயதுடைய சிறுமிக்கு திருமணம் நடந்தது தொடர்பாக வாலிபர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விழுப்புரம் அடுத்த கண்டமங்கலம் அருகே கணக்கன்பாளையத்தை சேர்ந்தவர் விஜயபாஸ்கர். இவருக்கும் திருவெண்ணெய்நல்லூர் அருகே ஏமப்பூர் பகுதியை சேர்ந்த 16 வயதுடைய சிறுமிக்கும் திருமணம் செய்து வைக்க இருவீட்டாரும் முடிவு செய்தனர். அதன்படி கடந்த செப்டம்பர் மாதம் விஜயபாஸ்கருக்கும், அந்த சிறுமிக்கும் மேலமங்கலத்தில் உள்ள அய்யனார் கோவிலில் திருமணம் நடந்தது. இதையடுத்து அவர்கள் குடும்பம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் இது குறித்த புகார் மாவட்ட சமூகநலத்துறைக்கு சென்றது. அதனை தொடர்ந்து மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் ராஜம்மாள் விஜயபாஸ்கரின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார். அதில் திருமண வயது எட்டாத சிறுமிக்கு திருமணம் நடந்து இருப்பது தெரிந்தது.

குழந்தை திருமண தடுப்பு சட்டம்

இது குறித்து அவர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் குழந்தை திருமண தடுப்பு சட்டத்தின் கீழ் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தந்தை, சிறுமியின் தாய், தந்தை ஆகிய 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுமியை அதிகாரிகள் மீட்டு காப்பகத்துக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் செய்திகள்