விருதுநகர்
153 மதுபாட்டில்கள் பறிமுதல்
|திருச்சுழி அருகே 153 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருச்சுழி,
திருச்சுழி அருகே 153 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
கண்காணிப்பு
திருச்சுழி அருகே உள்ள எம்.ரெட்டியபட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்தன.
இதையடுத்து எம்.ரெட்டியபட்டி போலீசார் மேற்கண்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் எம்.ரெட்டியபட்டி அருகே உள்ள கல்லுப்பட்டியை சேர்ந்த மூக்கையா என்பவரது மகன் மொட்டையன் (வயது52) என்பவரின் வீட்டில் வைத்து மது விற்பது தெரியவந்தது.
மதுபாட்டில்கள் பறிமுதல்
இதையடுத்து எம்.ரெட்டியபட்டி போலீசார் மொட்டையன் வீட்டில் சோதனையிட்டனர். அப்போது அவர் வைத்திருந்த சாக்குப்பையில் 153 மது பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து 153 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து எம்.ரெட்டியபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து மொட்டையனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.