< Back
மாநில செய்திகள்
கார், ஆட்டோ மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
மாநில செய்திகள்

கார், ஆட்டோ மூலம் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

தினத்தந்தி
|
9 Oct 2022 1:53 PM IST

கன்னியாகுமரி:

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி புரந்தரதாஸ் தலைமையில் வருவாய் ஆய்வாளர் ரெதன் ராஞ் குமார் கொண்ட குழுவினர் குழித்துறை-யை அடுத்த வெட்டு வெந்நி பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு காரை தடுத்துசோதனை செய்ய முடியன்றனர். அந்த கார் நிற்காமல் தேங்காய்பட்டணம் சாலையை நோக்கி வேகமாக சென்றது அதிகாரிகள் அந்த காரை சுமார் 2- கிலோமீட்டர் தூரம் பின்தொடர்ந்து துரத்தி சென்றனர்.

ஆனால் அந்த காரை உதச்சி கோட்டை அருகாமையில் சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுனர் தப்பி ஓடி விட்டார் . காரை சோதனை செய்தபோது அந்த காரில் சின்னச்சின்ன மூட்டையாக ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும் அதே பகுதியில் மீண்டும் வாகன சோதனையில் ஈடுபட்ட கொண்டிருந்தபோது வேகமாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனை செய்ய முயன்றனர். ஆனால் அந்த ஆட்டோ நிற்காமல் சென்றது உடனே அந்த ஆட்டோ சுமார் மூன்று கிலோமீட்டர் தூரம் துரத்தி வந்தபோது மார்த்தாண்டம் பகுதியில் சாலையோரத்தில் நிறுத்திவிட்டு ஓட்டுநர் தப்பி ஓடி விட்டார்.

அந்த ஆட்டோவை சோதனை செய்தபோது ஆட்டோவில் சின்னச்சின்ன மூட்டையாக 500 கிலோ ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. விசாரணையில் அந்த ரேஷன் அரிசி கேரளாவுக்கு கொண்டு செல்ல முயன்றது தெரியவந்தது.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை காப்புக்காடு அரசு குடோனிலும், வாகனங்களை விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகத்திலும் ஒப்படைக்கப்பட்டது. மேலும் வாகனங்களை நிறுத்தி விட்டு தப்பி ஓடிய ஓட்டுநர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்