< Back
மாநில செய்திகள்
காஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை
மாநில செய்திகள்

காஞ்சிபுரத்தில் நகைக்கடை அதிபர் வீட்டில் 150 சவரன் நகை கொள்ளை

தினத்தந்தி
|
3 March 2024 9:25 PM IST

மொத்தம் 150 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் ரங்கசாமிகுளம் பகுதியில் உள்ள விளக்கடிகோவில் தெருவில் மகாவீர் சந்த் என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடை கீழ் தளத்தில் உள்ள நிலையில், அதே கட்டிடத்தின் மேல் தளத்தில் மகாவீர் சந்தின் வீடு உள்ளது.

இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை மகாவீர் சந்த், தனது கடையையும், வீட்டையும் பூட்டிவிட்டு உறவினர் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக சென்னை சென்றுள்ளார். இந்நிலையில் இன்று சென்னையில் இருந்து திரும்பிய மகாவீர் சந்த், தனது வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து உடனடியாக விஷ்ணு காஞ்சி காவல்நிலையத்தில் மகாவீர் சந்த் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரது வீட்டில் தீவிர சோதனை நடத்தினர். அவரது நகைக்கடையில் இருந்த நகைகள் எதுவும் திருடுபோகவில்லை. அதே சமயம் அவரது வீட்டில் இருந்து மொத்தம் 150 சவரன் நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்