< Back
மாநில செய்திகள்
ஈரோடு
மாநில செய்திகள்
150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
|22 Jun 2023 3:28 AM IST
150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது
தாளவாடி அருகே கொங்கள்ளி பிரிவு சாலையில் வட்ட வழங்கல் அலுவலர் ரா.பிரகாஷ், தனி வருவாய் ஆய்வாளர் சு.தர்மராஜன் மற்றும் அதிகாரிகள் நேற்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் ஒரு நபர் மூட்டையுடன் வந்தார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். உடனே மொபட்டில் இருந்த நபர் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
பின்னர் மொபட்டில் இருந்த 2 மூட்டைகளை பிரித்ததில் அவற்றில் 150 கிலோ ரேஷன் அரிசி இருந்ததும், அவற்றை கடத்தியதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து ரேஷன் அரிசி மூட்டைகளுடன் மொபட் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தப்பி ஓடிய நபர் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.