விருதுநகர்
சிவகாசியில் ரூ.150 கோடியில் மருத்துவக்கல்லூரி
|நவீன வசதிகளுடன் சிவகாசியில் ரூ.150 கோடியில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சி.வி. கணேசன் கூறினார்.
நவீன வசதிகளுடன் சிவகாசியில் ரூ.150 கோடியில் மருத்துவக்கல்லூரி அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் சி.வி. கணேசன் கூறினார்.
மருத்துவக்கல்லூரி
விருதுநகர் அருகே ஆமத்தூரில் நடந்த கருத்தரங்கில் அமைச்சர் கணேசன் பேசியதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் 1,064 பட்டாசு ஆலைகள் உள்ள நிலையில் 56 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மாவட்டத்தில் ஏற்படும் விபத்துகளை தடுப்பது மட்டுமல்லாமல் தொழிலாளர்களை காப்பாற்றுவதும் அரசின் கடமையாகும்.
மேலும் சிவகாசியில் அரசு தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை மற்றும் மருத்துவக்கல்லூரி ரூ.150 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளும், மத்திய அரசிடம் ஒப்புதல் பெறும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது.
1,123 ஆய்வு
விபத்தில்லா பட்டாசு தொழிலை உருவாக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு சென்னையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது. அதன் விளைவாக இந்த கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. பட்டாசுஆலைகளில் தீபாவளி நேரத்தில் மட்டும் 1,123 ஆய்வுகளும், ஆண்டுதோறும் 545 ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு விபத்துக்களை தடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் 35,963 தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக பணியாற்றுவது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பட்டாசு விபத்து குறித்து 1,741 வழக்குகள் விசாரணையில் உள்ளது. 800 பட்டாசு ஆலைகளில் இதுவரை ஒரு விபத்து கூட ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.